வவுனியாவில் பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை தமிழ் செய்திகள் - ஈழ தீபம்

வவுனியாவில் பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் - ஒருவர் கைது




வவுனியா புளியங்குளம் பொலிஸ் நிலைய வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவரை (31) திகதி இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . 

 சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கான வாகனத்தின் சென்ற பொலிஸாரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற நபர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


 இதனையடுத்து குறித்த நபரை புளியங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மீது மேற்கொள்ளப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவரை வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில்
 ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

About ஈழ தீபம்