மகாராஷ்ட்ராவில் உற்பத்தி ஆலை அமைக்கிறதா டெஸ்லா? – வெளியான புது அப்டேட்.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை தமிழ் செய்திகள் - ஈழ தீபம்

மகாராஷ்ட்ராவில் உற்பத்தி ஆலை அமைக்கிறதா டெஸ்லா? – வெளியான புது அப்டேட்..

 



உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மகாராஷ்டிரா மாநில அரசு எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக புனேவுக்கு அருகில் இருக்கக்கூடிய சக்கான் மற்றும் சிக்காலி ஆகிய இரண்டு பகுதிகளில் இருக்கும் நிலங்களை வழங்க முன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட காலமாகவே எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தயாரிக்க கூடிய மின்சார வாகனங்கள் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் வரி அதிகமாக இருப்பதால் டெஸ்லா நிறுவனம் தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவி இங்கே மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யலாம் டெஸ்லாவுக்கு சாதகமாக மின்சார வாகன கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தன்னுடைய அமெரிக்க பயணத்தின் போது டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து எலான் மஸ்க் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை இந்தியாவில் நிறுவுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






About UPDATE