துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபருக்கு உதவியாக செயற்பட்ட பெண்ணே குற்றச் செயலை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் உள்ள கெஹெல்பத்தர பத்மே என தெரிவிக்கப்படும் நபர் ஒருவரே கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செவ்வந்தி வீரசிங்க எனப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
தற்போது குறித்த பெண்ணை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.