நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கிசூடு.... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை தமிழ் செய்திகள் - ஈழ தீபம்

நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கிசூடு....

 

நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட "கணேமுல்ல சஞ்சீவ"


              

    கொழும்பு புதுக்கடை 5ஆம் இலக்க நீதிமன்றத்தினுள்ளே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சஞ்சீவ சமரக்கோன் எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொல்லப்பட்டார்.  திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான "கணேமுல்ல சஞ்சீவ" நேற்று (19) முற்பகல் வழக்கொன்றுக்காக நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு சாட்சிக்கூண்டில் நிறுத்தப்பட்ட போதே சுட்டுக்கொல்லப்பட்டார். 

                    சட்டத்தரணி போன்று வேடமிட்டு நீதிமன்றுக்குள் இருந்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தலைமறைவாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நீதிமன்றத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About UPDATE