Elon Musk Vs Open AI: அதிரும் டெக் உலகம்!... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை தமிழ் செய்திகள் - ஈழ தீபம்

Elon Musk Vs Open AI: அதிரும் டெக் உலகம்!...

 

Elon Musk Vs Open AI: Open AI நிறுவனத்தை விலைக்குக் கேட்கும் எலான்; அதிரும் டெக் உலகம்!


               
          
                   பிரபல செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனமான 'Open AI', அதன் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லும் வகையில் செயல்படுவதாக வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க், இப்போது அந்த நிறுவனத்தை வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். எலான் மஸ்க், முதலீட்டாளர்கள் குழுவுடன் சேர்ந்து, 'ஓபன் ஏஐ' நிறுவனத்தை $97 பில்லியன் டாலருக்குத் தன்னிடம் விற்குமாறு அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை அணுகியதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மஸ்கின் இந்த ஆஃபரை நிராகரித்த சாம் ஆல்ட்மேன், 'நன்றி, வேண்டாம்' என்று அவருக்குப் பதிலளித்துள்ளாராம்.



  வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, மஸ்க்கும் அவரது முதலீட்டுக் குழுவும், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை கையில் எடுத்து, அதன் லாப நோக்கமற்ற தோற்றத்திற்குத் திரும்புமாறு Open AI -இன் வாரியத்திடம் அதிகாரபூர்வமாக முன்மொழிந்துள்ளனர். மஸ்க்கின் வழக்கறிஞர் மார்க் டோபரோஃப், "சாம் ஆல்ட்மேன் மற்றும் தற்போதைய குழு 'Open AI' ஒரு முழு லாப நோக்கமுடைய நிறுவனமாக மாற விரும்பினால், அத்தகைய அற்புதமான தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்காக, தொண்டு நிறுவனத்தின் மூலம் நியாயமான முறையில் ஈடுசெய்யப்படுவது முக்கியம்" என்று கூறியிருக்கிறார்.
        இந்த நிறுவனம் கடந்த 2015ல் தொடங்கப்பட்டது. அப்போது நிறுவனத்தைத் தொடங்கிய நபர்களில் எலான் மஸ்க்கும் ஒருவராக இருந்தார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக எலான் மஸ்க் கடந்த 2018 ம் ஆண்டில் Open AI போர்டு ஆஃப் டைரக்டர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். தன்னிடம் நிறுவனத்தின் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென மஸ்க் விரும்பினார்.அது முடியாது என அறிந்ததும் அவர் விலகினார்.
    முன்னதாக, லாபம் சார்ந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு அவரும் சம்மதம் சொல்லி இருந்தார் என 'Open AI' எலான் மஸ்க் குறித்துத் தெரிவித்துள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயல்பாட்டை மஸ்க் விமர்சித்து வருகிறார். அது தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறார். லாப நோக்கமற்ற செயல்பாட்டில் இருந்து "Open AI" பாதை மாறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 



    மேலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் 'Open AI' இணக்கமாக பணியாற்றி வருவதையும் விமர்சித்து வந்தார். இந்நிலையில் 'ஓபன் ஏஐ' நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் எலான். ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிர்வாக குழுவுக்கு பிப்.10-ம் தேதி அன்று தங்களது 97.4 பில்லியன் டாலர் ஆஃபரை மஸ்க் மற்றும் இன்னும் சில முதலீட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளனர். 
               இதை மஸ்க் தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். வேண்டுமானால் அந்த தொகையை இன்னும் கூட்டி வழங்க தங்கள் தரப்பு தயார் என்றும் மஸ்க் வழக்கறிஞர்கள் கூறிவருகின்றனர். எலான் மஸ்கின் இந்த வலையில் 'Open AI' நிறுவனம் சிக்குமா? அல்லது சாம் ஆல்ட்மேன் தனது நிறுவனத்தைத் தக்க வைத்துக் கொள்வாரா? என்பது டெக் உலகில் பெரும் அதிர்சசியை  ஏற்படுத்தியிருக்கிறது.


About UPDATE