கொழும்பு - புதுக்கடை பகுதியில் கொத்துரொட்டி வாங்கச் சென்ற வெளிநாட்டவரை அவமதித்து துன்புறுத்திய குற்றச்சாட் டில்
கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
அதன்படி 50,000 ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் அடங்கலான சரீரப் பிணையில் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .
சந்தேக நபரான உணவக உரிமையாளர் வெளிநாட்டவர் ஒருவரிடம் கொத்துரொட்டி ஒன்றின் விலை 1,900 ரூபாய் எனக் கூறியதுடன்
அதனை கொள்வனவு செய்ய அவர் மறுத்த நிலையில் ,அவரை அச்சுறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார் .
இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில் சங்தேக நபரான 51 வயதுடைய உணவக உரிமையாளர் வாழைத்தோட்டம் காவல்துறையினரால் கைது செயப்படுள்ளார் .