சென்னை விமான நிலையத்தில் பிரபல நாட்டுப்புற மற்றும் சினிமா பாடகர் வேல்முருகன் மதுபோதையில் சிஐஎஸ்எஃப் வீரர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
பிரபல நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் ‘சுப்பிரமணியபுரம்’, ‘ஆடுகளம்’, ‘நாடோடிகள்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் .
இந்நிலையில் நேற்று மதியம் நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் திருச்சி செல்ல வேண்டிய நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் அவரை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது பாடகர் வேல்முருகன் மதுபோதையில் இருந்தது தெரியவந்ததை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் சம்மந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், வேல்முருகன் மதுபோதையில் இருந்ததால் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது .
மதுபோதையில் இருந்த பாடகர் வேல்முருகன் பாதுகாப்பு படை வீரர்களிடம் தகராறில் ஈடுபாடுள்ளதாக கூறப்படுள்ளது .
பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பாடகர் வேல்முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடப்படுள்ளது .
பாடகர் வேல்முருகன் மன்னிப்பு கேட்டதை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்தனர் குறிப்பிடத்தக்கது .