கண்டியில் பிரதான ஆண்கள் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவன் ஒருவர் வீட்டின் அறையொன்றில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்
பொத்தபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்திவெல பிரதேசத்தில் 08 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ரொனித் என்ற பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் .
குறித்த மாணவன் பாடசாலையில் ரக்பி வீரர் எனவும் பெற்றோரிடம் கையடக்கத் தொலைபேசி கேட்டபோதும் பெற்றோர் தர மறுத்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதன் காரணமாகவே குறித்த மாணவன் இந்த முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியந்த ரணசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது .