காதலியின் பெயரை, கீழ் உதட்டில் பச்சைக் குத்தியுள்ள இளைஞர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கி காதலை வெளிப்படுத்துவார்கள் .
பழங்காலத்தில் " பச்சை குத்துதல் " என்று இருந்து வந்த இந்த முறை தற்போழுது டாட்டூவாக பரிணமித்துள்ளது .
டாட்டூ குத்துவதற்கு என்று சிறப்பு ப யி ற் சி பெற்ற நபர்கள் உலகம் முழுவதும் வித்தியாசமான முறையில் உடலில் பச்சை குத்தி வருகின்றனர் .
அந்தவகையில் காதலர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக உதட்டில் டாட்டூ வரைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது .
பொதுவாக காதலியின் பெயரை கைகள், முதுகு கழுத்து என பல்வேறு இடங்களில் குத்துவது வழக்கம் குறித்த
காதலியின் "அம்ருதா" பெயரை தனது கீழ் உதட்டில் பச்சை குத்தியுள்ளார் .
டாட்டூ ஆர்டிஸ்ட் "அபிஷேக் சப்கல்" என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.தற்போது இதனை அதிகளவில் பகிர்ந்து இணையதள வாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.