அனுராதபுரம் : ஆணாக நடித்த யுவதியின் செயல் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அனுராதபுரம் : ஆணாக நடித்த யுவதியின் செயல்


அனுராதபுரம் கலென்பிந்துனவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 சமூக வலைதளங்கள் மூலம் கிட்டத்தட்ட ஒரு வருடமாக காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில், 19 வயது யுவதி 15 வயது மாணவியிடம் தன்னை ஆண் என அறிமுகம் செய்துள்ளார். தொலைபேசியில் ஆண் ஒருவரின் குரலில் அழைத்து இந்த உறவைப் பேணி வந்துள்ளார். 

இந்த உறவு சுமார் ஒரு வருடமாக தொடர்ந்துள்ளது. குறித்த யுவதி இளைஞன் போல் நடித்து 15 வயது மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டு மாணவியின் தகாத புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவியை 19 வயது யுவதி தனது தந்தையை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். ஆனால், மாணவி மறுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது .

மேலும் தன்னை பார்க்க வராவிட்டால், முன்பு அனுப்பிய அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களுக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார் . 

 மாணவி தொடர்ந்து தன்னை சந்திக்க மறுத்ததால் மாணவியின் புகைப்படங்களை 19 வயது யுவதி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .

About UPDATE