முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், திகதி (12.02.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் வசிக்கும் 18 வயதுடைய நிதர்சினி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு உயிரிழந்து உள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில் பெற்றோர்கள் உறவினர்கள் இல்லாத நிலையில் மாணவி தவறான முடிவெடுத்து உள்ளார் என போலீசார் குறிப்பிட்டுள்ளார் .
எந்த ஒரு பிரச்சனைக்கும் மரணம் ஒரு தீர்வு இல்லை மாணவர்கள் மீது பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்