நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நியூட்டன் தோட்டத்தில் மரக்கிளை விழுந்து பாடசாலை மாணவனொருவர் பலியான சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூட்டன் தோட்டத்தை சேர்ந்த முருகன் அஷான் என்ற 14 வயது மாணவன் நேற்று முன்தினம் சிகையலங்கார நிலையம் நோக்கி சென்றுள்ளார்.
இதன்போது வீதியில் சிலர் மரம்வெட்டிகொண்டிருந்துள்ளனர்.
அவ்வேளையில் மரக்கிளையொன்று சிறுவன்மீது விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார் மேலும்
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாறப்பட்டார் .
இந்நிலையில் வைத்தியசாலை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் இதனையடுத்து சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
மேலும் போலீசார் குறிப்பிடுகையில் அனுமதி பத்திரமின்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் மரம் வெட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்டுள்ளானர் . இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.