வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: ஜெர்மனி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: ஜெர்மனி


உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தை செயற்படுத்த ஆரம்பித்துள்ளன. பெல்ஜியம், நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் குறைந்த வேலை நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், ஜெர்மனியும் இந்த பட்டியலில் இணைகிறது.

 ஜெர்மனியில் பெப்ரவரி முதலாம் திகதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே வேலை நாட்கள் எனும் முன்னோடித் திட்டம் அறிமுகமாகிறது. இந்த திட்டத்தை 6 மாதங்களுக்கு சோதனை முயற்சியாக ஜெர்மனி முன்னெடுத்துள்ளது.
 பொருளாதார மந்த நிலை, திறமையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை, அதிக பணவீக்கம் போன்றவற்றுடன் ஜெர்மனி தற்போது போராடி வருகிறது. 

 வாரத்தில் 4 வேலை நாட்கள் மாத்திரம் இருப்பது ஊழியர்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருந்து, உற்பத்தி திறனை மேம்படுத்துமா என பரிசீலிக்கவுள்ளது. இந்த சோதனை முயற்சியில் ஜெர்மனியின் 45 கம்பெனிகள் இணைகின்றன. இது நல்ல பலன்களை தரும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. 

 உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About UPDATE