இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் 3 மாடி கட்டிடம் சரிந்து விழுந்துள்ளது .
குறித்த கட்டிடத்தின் அருகே மற்றுமொரு புதிய கட்டிடத்தை நிர்மானிப்பதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததாக அந்நாடு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது .
அத்துடன் குறித்த கட்டிடத்தில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்படத்தினால் பெரும் பாதிப்பை தவிர்க்க முடிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது .