குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் மூழ்கிய துவாரகாவில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை செய்தார்.
துவாரகா பகுதிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வலுவான ஒரு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது .அதாவது யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகராக துவராகா இருந்ததாகவும், அதனை கிருஷ்ணன் தான் உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது .
மேலும் இந்த துவாரகா காலப்போக்கில் அரபிக்கடலுக்குள் மூழ்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடலுக்குள் துவாரகா நகரம் மூழ்கியது தொடர்பாக பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளில் அரபிக்கடலில் நீருக்கடியில் பழங்கால நகரம் மூழ்கியதற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் துவாரகை இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.இந்நிலையில் தான் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்றார்.
குஜராத் உள்பட நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் . அவர் ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் காவி உடையில் படகில் அரபிக்கடலுக்குள் பயணித்தார். கடவுள் கிருஷ்ணருக்கு மயிலிறகு விருப்பமான ஒன்று என்பதால் பிரதமர் மோடி தனது கையில் மயிலறகு கொண்டு .
ஆழ்கடலில் பிரதமர் மோடி ‛ஸ்கூபா டைவிங்' கருவிகளை உடலில் பொருத்தி கடலுக்குள் குதித்தார்
பிரதமர் மோடி மற்றும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்று , அங்கு பிரதமர் மோடி தான் கொண்டு சென்ற மயிலறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். அதன்பிறகு தரைப்பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்தார். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன
.
இந்நிலையில் தான் அரபிக்கடலுக்கள் துவாரகா மூழ்கியதாக கூறப்படும் இடத்தில் பிரதமர் மோடி பூஜை செய்தது பற்றி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பிரதமர் மோடி, ‛‛ நீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தது தெய்வீக அனுபவமாக இருந்தது.
ஆன்மீக மகத்துவம் மற்றும் காலவரைமுறையற்ற பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிப்பார்'' என தெரிவித்துள்ளார்.