யாழ் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற தென்னிந்திய பாடகர்கள் உள்ளிட்ட திரையுலகத்தினர் பங்குபற்றிய இசைநிகழ்வில் ஏற்பட்ட குழப்ப நிலையினை தொடர்ந்து அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் ஒழுங்கமைப்பில் ஏற்பட்ட குறைபாடுகளே குழப்ப நிலைக்கு காரணமென கூறப்படும் நிலையில் நிகழ்வை பார்வையிடச் சென்ற சிலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையில் இடம்பெற்ற குழப்பநிலையினை தொடர்ந்து இசைநிகழ்வானது இடைநிறுத்தப்பட்ட சம்பவம் தற்போது சமூகவலைத்ததில் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.