வவுனியா புகையிரத பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வவுனியா புகையிரத பாதுகாப்பு கடவையில் போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத கடவையில் பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றது.




  வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் பாதுகாப்பு கடவையில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பாகங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல் ,புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனங்களை செலுத்துதல் இது போன்ற செயற்பாடுகளினால் தினசரி விபத்துக்கள் இடம் பெறுகின்றது.

About UPDATE