உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசான் கண்டுபிடித்துள்ளது . இது சுமார் 26 அடி நீளம், 200 கிலோ எடை உடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஃப்ரீக் வோங்க், உலகின் மிகப்பெரிய பாம்பு என்று நம்பப்படும் 26 அடி நீளமுள்ள பச்சை அனகோண்டாவின் வீடியோவைப் பதிவு செய்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அனகோண்டாவின் வீடியோவைப் பகிர்ந்துகொண்டு, வோங்க் எழுதியதாவது,
"நான் பார்த்த மிகப்பெரிய அனகோண்டாவை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு கார் டயர் போன்ற தடிமன், 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுள்ளது .
நான் இதற்கு முன்பு ஒரு புதிய இனத்தைக் கண்டுபிடித்தேன். ஆனால் அது அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒரு சிறிய பாம்பு. இப்போது அது ஒரு புராண மற்றும் பழம்பெரும் விலங்கு ஆகும்” என்று கூறியுள்ளார்.
இந்த வகை பாம்பு இனத்திற்கு லத்தீன் பெயர் ''யூனெக்டெஸ் அகாயிமா'' வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு பச்சை அனகோண்டா. "அகாயிமா" என்ற சொல் வட தென் அமெரிக்காவின் பல பழங்குடி மொழிகளில் இருந்து வந்தது..
பெரிய பாம்பு என்று பொருள்படும். முன்னதாக, வில் ஸ்மித்துடன் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் டிஸ்னி+ தொடரான போலல் டு போல் படப்பிடிப்பின் போது புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக இன்டிபென்டன்ட் தெரிவித்துள்ளது.