கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம், கொக்கடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான ஹீனா கவுசர். இவர், 24 வயதான தௌஃபிக் காடிஎன்ற இளைஞரை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன் அவரை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிடப்படுகிறது.
அதன் பின்னர், நர்சிங் கல்லூரியில் சேர்ந்து படித்த ஹீனாவிற்கு, அவரது கணவரின் நண்பரான யாசின்-பகோட்டின் நட்பு கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து யாசினின் இன்ஸ்டா பக்கத்தை பாலோ செய்த ஹீனா, அவரது கலர்ஃபுல் ரீல்ஸ்களை பார்த்து, அரட்டை அடிக்க ஆரம்பித்துள்ளார்.
ஹீனாவும், யாசினும் செல்போன் எண்களை ஷேர் செய்து நண்பர்களாக பழக, நாளடைவில் அது தகாத உறவாக உருவெடுத்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, கதைத்துள்ளனர்.
அதுதொடர்பாக தௌஃபிக்கிற்கு தெரியவந்தநிலையில் , மனைவியையும் - நண்பனையும் அழைத்து கண்டித்துள்ளார்.
இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் ஹீனா, யாசினும் . 20 நாட்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இரவில் மூன்று பேரை அழைத்து சமரசம் செய்தபோது ஹீனா, யாசினுடன் செல்வதாக திட்டவட்டமாக கூறினார். அப்போது மன உடைந்து போன தௌஃபிக், இருவரின் காதலுக்கும் தடையாக இருக்க மாட்டேன் எனக்கூறியுள்ளனர்.
பின்னர் யாசின் மற்றும் ஹீனா இருவரும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அப்போது இவர்களுக்கு தெரியாமல் இருவரின் உயிருக்கும் தௌஃபிக் எமனாக வரப்போகிறார் என்று.
புதுஜோடி இருவரும் ஒரு மாதமாக, கொக்கடனூர் கிராமத்தின் புறநகரில் உள்ள ஜாதவ் பண்ணையில் வசித்து வந்தனர்.
அப்போதுதான் கிராமத்தில் யல்லம்மா தேவியின் திருவிழா நடைபெற்றது. அதில் முன்னாள் கணவர் தௌஃபிக்-கும், ஹீனாவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். ‘உன்னை விட, யாசின் என்னை நன்றாக பார்த்து கொள்கிறான், நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரியுமா’?, எனக்கூறி தௌஃபிக்-கை கூறிய நிலையில்
கையில் அரிவாளுடன் புறப்பட்டு சென்றவர், ஹீனாவின் வீடு புகுந்து ஆக்ரோஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஹீனா, அவரது புது கணவன் யாசின் ஆகிய இருவரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார்.
சம்பவத்தை தடுக்க முயன்ற யாசினின் தாய் அமினாபாய் மற்றும் உறவினர் முஸ்தபா ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டப்பட நிலையில் உயிர் இழந்துள்ளனர் .
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த பொலிஸார், கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களையும், உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த யாசினின் தாய் மற்றும் உறவினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதை அடுத்து, இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிந்த பொலிஸார்,, தலைமறைவாக இருந்த தௌஃபிக்-கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணமான 30 நாட்களில் புதுமோகத்தால் வீட்டை விட்டு ஓடிய மனைவி மற்றும் அவரது காதலன் இருவரையும் முன்னாள் கணவன் அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.