முல்லைத்தீவில் கோர விபத்து!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

முல்லைத்தீவில் கோர விபத்து!!!


அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


 விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் சாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் திகதி (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

 துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ட்ர​க் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் மேலும் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளார். 


 குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது .

About UPDATE