VJ Archana: மாயா-பூர்ணிமாவுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா! வைரல் வீடியோ.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

VJ Archana: மாயா-பூர்ணிமாவுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் வின்னர் அர்ச்சனா! வைரல் வீடியோ..

 




சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர், விஜே அர்ச்சனா. இவர், தனது சக போட்டியாளர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஐப்பசி 1ஆம் திகதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி, கடந்த வாரம் 106 நாட்களுக்கு பிறகு இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது.


 பிரதீப்பின் ரெட் கார்டு விவகாரம், இரண்டு வைல்டு கார்டு, தலைக்கு மேல் பிரச்சனைகள் என இந்த நிகழ்ச்சியில் பல பிரச்சனைகள் உருவாகின. என்னதான் பிறர் இந்த சீசன் சுத்த மொக்கையாக இருக்கிறது என்று கூறினாலும், இளைஞர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களுடன் நிறைய டிஆர்பியுடன் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றது. பிரதீப்புக்கு ஆதரவாக நின்ற அர்ச்சனா.. பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இந்த முறை பல புதிய விதிமுறைகள் போடப்பட்டன. இரண்டுமுறை இந்நிகழ்ச்சியில் வைல்டு கார்டு செக்மெண்டும் வந்தன. அப்படி, போட்டி ஆரம்பித்து 28 நாட்கள் கழித்து, போட்டியாளராக நுழைந்தவர் ஆர்.ஜே.அர்ச்சனா. இவர் வந்த முதல் வாரமே போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார். 

 வீட்டிற்குள் அனைவரும் கேங்காக வந்து சண்டை போட்டாலும், அதை எதிர்த்து கேட்ட அர்ச்சனாவிற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது. பிரதீப்பின் ரெட் கார்டு விவகார்த்தில் பெரும்பாலானோர் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று கூற, இவர் மட்டும் “என்னிடம் அவர் அப்படி பழகியதில்லை..அதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டாம்” என்று கூறினார். இது, பிரதீப் ரசிகர்களை இவர் பக்கம் ஈர்த்தது. டைட்டில் வின்னர்.. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி கடந்த வாரம் நடைப்பெற்றது. பிக்பாஸில், கடைசியாக டாப் 5 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 இதில், வைல்டு கார்டு போட்டியாளர்களான அர்ச்சனா, தினேஷ் ஆகிய 2 பேர் இருந்தனர். வீட்டில் 100 நாட்களுக்கும் மேல் இருந்த விஷ்ணு, மாயா, மணிச்சந்திரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்னர். பிக்பாஸில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் யாருக்குமே இதுவரை டைட்டில் கொடுக்கப்பட்டதில்லை. முதல் முறையாக இது அர்ச்சனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அர்ச்சனா டைட்டில் வென்றதை, பிரதீப்பே வென்றது போல அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இந்த நிலையில், இவர் வெளியில் வந்தவுடன் பிரதீப் பக்கம் நிற்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About UPDATE