வெஜ் ப்ரைடு ரைஸ் – Veg Fried Rice
- Ingredients
- பாஸ்மதி அரிசி – 250 கிராம்
- வெங்காயம் – 1
- கேரட் – 50 கிராம்
- பீன்ஸ் – 50 கிராம்
- பச்சை பட்டாணி – 50 கிராம்
- முட்டைக்கோஸ் – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 50 கிராம்
- குடைமிளகாய் – 50 கிராம்
- இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
- மிளகு பொடி – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
- அதில் ஒரு டிஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொண்டால் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.
- அதில் அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்.
- அரிசி முக்கால் பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
- அதன்மீது ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் ஊற்றி தண்ணீரை வடித்தவும், பிறகு ஒரு தட்டில் சாதத்தை உலர விட வேண்டும்.
- கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
- பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கவும், பச்சை பட்டாணியை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுதுகளை போட்டு வதக்கி, அத்துடன் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பிறகு குடைமிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கவும்.
- பிறகு முட்டைகோஸ், கேரட், பச்சை பட்டாணி போட்டு வதக்கவும்.
- அது வதங்கிய பிறகு சாதத்தை போட்டு கிளறவும். அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
- பிறகு மிளகு பொடி சேர்த்து கிளறவும், அதன்பின் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும்.
- சுவையான வெஜ் ப்ரைடு ரைஸ் தயார்.
Yield4