உயர்ந்தது VAT.................. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

உயர்ந்தது VAT..................

 அரசாங்கத்தின் புள்ளிவிபர தகவல்களின் பிரகாரம், நாட்டில் 60% குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளதுடன், 91% செலவினங்கள் அதிகரித்துள்ளன.



 பொருளாதார வங்குரோத்து நிலையால் 22% குடும்பங்கள் கடனால் பாதிக்கப்படும் போது, ​​3 முதல் 21 வயது வரையிலான பாடசாலை செல்லும் வயதினரில் 54.9% பேர் பொருளாதார


 வங்குரோத்து நிலையால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.

 

7 வீதமான மக்கள் தமது சுகாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் வழமைக்கு மாறான போக்கை கையாண்டு வரும் நிலையில்


நாட்டில் பரிதாபகரமான மற்றும் அவலகரமான நிலைமை உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

இந்நிலையில் நாட்டை வங்குரோத்தடையச் செய்த குழுவினரால் நாட்டை சரியான முறையில் கட்டியெழுப்ப முடியுமா இல்லையா என்பது துறைமுக அதிகார 


சபையின் கப்பல்களை பயன்படுத்திக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கடல் நடுவில் நடத்திய விருந்து கொண்டாட்டத்திலிருந்து புலப்படுகிறது.

 

நாட்டு மக்கள் நிம்மதி இழந்து இருக்கும் வேளையில் நாட்டு மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி


 கடலில் மதுபான விருந்து கொண்டாட்டங்களை நடத்தும் கேவலமான அரச ஆட்சி நாட்டில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் கொள்முதல் ஊழல் உட்பட இந்நாட்டிலிருந்து மருந்துகளைத் திருடிய அரசியல்வாதிகள் மற்றும்


 அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை முன்னெடுத்துச் சென்றாலும்,இந்தத் திருட்டில் ஈடுபட்ட முன்னாள் சுகாதார அமைச்சரையும் இந்தக் குழுவையும் பாதுகாக்க 113 பாராளுமன்ற உறுப்பினர்கள்


 தமது கைகளை தூக்கினர்.இந்த 113 பேரும் நாட்டுத் துரோகிகள்,மக்கள் துரோகிகள்.இந்த 113 பேரும் திருட்டுக்கு மோசடிக்கு ஆதரவாக முன் நிற்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

2020 இல் ஐ.எம்.எப் வழங்கிய 100 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் மறுத்த போது வாயை மூடிக்கொண்டு இருந்த அமைச்சர் பந்துல  குணவர்தன,


ஆடை அணிந்து கொண்டா தற்போது ஐ.எம்.எப் கூறுவதற்கு இனங்க அவ்வாறே முன்செல்வோம் என கூறுவது என கேட்ட எதிர்க்கட்சித் தலைவர்,தற்போதைய அரசாங்கம்


 ஐ.எம்.எப் யை முன்னிலைப்படுத்தி மக்களை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் போசாக்குக் குறைபாட்டைத் தடுப்பது தொடர்பாக எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை

 மீதான விவாததில் இன்று (11) கலந்து கொண்டு கருத்துத்

 தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்

About ஈழ தீபம்