PhonePe, Google Pay, Paytm பயனர்களுக்கு முக்கிய செய்தி: நாளை முதல் புதிய விதிகள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

PhonePe, Google Pay, Paytm பயனர்களுக்கு முக்கிய செய்தி: நாளை முதல் புதிய விதிகள்

 

: கடந்த மாதம் முதல் UPI பரிவர்த்தனைகளின் புதிய சேவை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) யூபிஐ பரிவர்த்தனைகளில் (UPI Transactions) பல மாற்றங்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த மாற்றங்கள் மூலம் பயனர்கள் பலன்களை பெறுவார்கள்

கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (Phonepe) போன்ற கட்டண செயலிகளை பயன்படுத்தும்

யுபிஐ பயனர்கள் (UPI Users) இப்போது ஒரே நேரத்தில் ரூ. 5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தலாம். ஆனால் இந்த வசதி சில சூழ்நிலைகளில் மட்டுமே கிடைக்கும்

இந்த வசதி எப்போது நடைமுறைக்கு வரும்? எந்தெந்த இடங்களில் லட்சக்கணக்கில் பணத்தை ஒரே நேரத்தில் ஆன்லைனில் செலுத்தலாம்

இவை பற்றிய முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.

 

இந்த இடங்களில் ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை UPI மூலம் செலுத்தலாம்

 

NPCI மக்களுக்கு ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது

இதன் வசதியை மருத்துவமனை அல்லது கல்வி தொடர்பான வசதிகளை பெற மக்கள் பயன்படுத்தலாம்

மருத்துவமனைகள், கல்வவி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் UPI பயனர்கள் ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்.

 

மேலும் படிக்க | உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிக்கலையா... காலக்கெடு நீட்டிப்பு... வீடு தேடி வரும் சேவை..!!

 

5 லட்சம் வரை யுபிஐ மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி எப்போது கிடைக்கும்?

 

யுபிஐ மூலம் 5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி ஜனவரி 10, 2024, அதாவது நாளை முதல் NPCI ஆல் தொடங்கப்படும்.

  கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India), மருத்துவமனை மற்றும் கல்வி சேவைகளுக்கு 

ஒரே நேரத்தில் UPI மூலம் ரூ.5 லட்சம் வரை செலுத்தலாம் என உத்தரவிட்டிருந்தது.

 

Payment Apps: கொடுக்கல் வாங்கலில் சிக்கலை சந்திக்க வேண்டி இருந்தது

 

மருத்துவமனை மற்றும் கல்வி சேவைகளுக்கு பணம் செலுத்துவதில் மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருந்தது


ஆனால் இப்போது இந்த சேவை தொடங்கப்பட்ட பிறகு, UPI பரிவர்த்தனைகளை செய்வது எளிதாக இருக்கும்

பணம் செலுத்துவதற்கான UPI பரிவர்த்தனை வரம்பை அதிகரிக்குமாறு அனைத்து வங்கிகளையும் NPCI கேட்டுக் கொண்டுள்ளது.

  இது தவிர, ஜனவரி 1, 2024 முதல் UPI இன் புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

 

ஒரே நேரத்தில் ரூ.1 லட்சம் மட்டுமே செலுத்த முடியும்

 

புதிய அப்டேட்டின் கீழ், பயனர்கள் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் பணம் செலுத்த முடியும்.

  ஆனால் முன்பு ரூ.1 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடிந்தது. சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு மட்டுமே இந்த வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சரிபார்க்கப்பட்ட வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கட்டண வரம்பு NPCI ஆல் செயல்படுத்தப்படும்.

 

UPI கட்டணத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது

 

UPI அடிப்படையிலான பணம் செலுத்துதல்களைப் பற்றி நாம் பேசினால், 2023 ஆம் ஆண்டில்,

 UPI பேமெண்ட்களின் அடிப்படையில் இந்தியா 100 பில்லியனைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும்

ரூ.118 பில்லியன் மதிப்பிலான தொகை UPI கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இதில் 60 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது

குறிப்பிடத்தக்கது.

About UPDATE