"மின்சார சபையின் தொழிற்சங்க தலைவர்கள் குழுவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.ரஞ்சன் ஜெயலால் உள்ளிட்டோர் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் கோல்பேஸ் கிரீன் வளாகத்திற்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மின்சார சபையை தனியார் மயமாக்க முயற்சிப்பதாக தெரிவித்து அதன் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனஅதன்படி, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (05) நடைபெறுகிறது.இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை தொடர்ந்து இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.