ஆடையின்றி திருவிழாவா!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆடையின்றி திருவிழாவா!!!

ஜப்பானின் இனாஜவா நகருக்கு அருகில் உள்ள கோனோமியா என்ற ஊரில் பாரம்பரிய மற்றும் முக்கிய மதமாக அறியப்படும் ஷிண்டோ மதத்தின் கோயில் 
                 ஒகினினுஷி என்ற கடவுளுக்காக கட்டப்பட்டது. இக் கோயிலில் இரண்டு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது . ஒன்று ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளும் நிர்வாண திருவிழா.  திருவிழாவானது 1650 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு பல்வேறு சடங்குகளை மேற்கொள்வார்கள்.


                   திருவிழாவானது முதல் முறையாக பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திருவிழா எதிர் வரும் பிப்ரவரி மாதம் 22ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஜப்பானில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த முடிவு


மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுவதுடன் இந்த முடிவுக்கு பல பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள அதேவேளை சிலர் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

பாரம்பரியத்தை அழிக்கும் செயல் என்றும் முன்னோர்களை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.  திருவிழாவில் கலந்துகொள்ள பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.   

   அதாவது 40 பெண்கள் முதற்கட்டமாக அனுமதிப்படுவார்கள் என்றும், அவர்கள் முழுமையாக உடை அணிந்து, பாரம்பரிய ஹாப்பி கோட் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆண்கள் பங்கு சண்டை போட்டியில் இருந்தும் விலகி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆண்கள் இடுப்பில் கோமணம் போன்ற உடையை அணிந்து இதில் கலந்துகொள்வார்கள். மேலும், கைகளில் மூங்கில் கழிகளை ஏந்திக்கொண்டு, ஒருவர் மீது ஒருவர் குளிர்ந்த நீரை ஊற்றிக்கொண்டு ஊர்வலமாக கோயில் வரை சென்று வழிபாடுவதுடன் இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் இந்த நிகழ்வினை வழிநடத்துவார்.     

    

 அவர் திருவிழா அன்று தனது தலையை மொட்டையடித்து, மக்கள் முன் செல்வார். அவர்கள், சுற்றியுள்ளவர்கள் அவரை தொடுவார்கள். அதன் மூலம் அவர்களது, கெட்ட சகுனங்கள் மறைந்து, நல்ல காலம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

About ஈழ தீபம்