இலங்கை, சிம்பாப்வே போட்டியில் குறுக்கிட்ட மழை
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் சிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடி வந்த நிலையிலேயே மழை குறுக்கிட்டுள்ளது.போட்டியில் மழை குறுக்கிடும் போதும் சிம்பாப்வே அணி 4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 12 ஓட்டங்களை பெற்றிருந்து.முன்னதாக போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றிருந்தது.