மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். முதலில், நம் உதடுகளுக்கு உணரும் திறன் அதிகம் இருப்பதால், தொடுதல் போன்ற அற்புதமான உணர்வு ஏற்படும்.
இரண்டாவது,
நமது பிறப்புறுப்பில் உள்ள சில பகுதிகளைத் தவிர, நம் உடலில் உள்ள வேறு எந்த பகுதிகளை விடவும் நம் உதடுகளின் ஓரத்தில் அதிகமான நரம்பணுக்கள் உள்ளன.
மூன்றாவது,
அதில் சுவை இருக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவமான சுவை இருக்கும். சிலர் மற்றவர்களை விட சுவையை கண்டறிவதில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
பின்னர்,
அதில் ஒருவித வாசனையும் இருக்கும். ஓவிட் என்ற கவிஞர், தனது கவிதைகளில், மார்பில் பழுக்க வைக்கும் ஆப்பிள்கள் போன்றவை முத்தங்கள் என்று வர்ணிக்கிறார்.
நாம்
ஏன் முத்தமிடுகிறோம் என்பதற்கு நிறைய கோட்பாடுகள் உள்ளன. ஆனால் அவற்றில், சில நாம் பூமியில் பிறக்கும்போது ஏற்படும் அனுபவங்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
இதனால்,
முத்தத்திற்குக் காரணமான இந்த நரம்பியல் பாதைகளை உருவாக்குகிறோம்.
மேலும்,
அன்பும், அரவணைப்பும் மற்றும் பல அற்புதமான நிகழ்வுகள்
நம் வாழ்வில் நிகழும்போது, நாம் அதனை வெளிப்படுத்த விரும்பினால், நாம் நம் உதடுகளைப் பயன்படுத்தி இவ்வாறு வெளிப்படுத்துகிறோம்.
மனிதர்களிடையே
முதல் முத்தம் எப்போது, எங்கு, எப்படி நடந்தது என்பதைக் கண்டறியலாம். நாம் அறிந்தவரை, பிற உயிரினங்களில் அதன் பெண் இணைகள் உச்சக்கட்ட கருத்தரிப்புத் திறனைப் பெற்றிருக்கும்போது, அவர்களின் பிறப்புறுப்பு பகுதியால் ஈர்க்கப்படுக்கின்றன.
உதடுகளை
‘பிறப்புறுப்பின் எதிரொலி’ (GENITAL ECHO) என்று அழைக்கிறார்கள் என்று சில மானுடவியலாளர்கள் நினைக்கின்றனர். அவை பெண் பிறப்புறுப்புகளின் வடிவம், நிறம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன.