வவுனியா குருமன்காடு பகுதியில் பெண் சடலமாக மீட்க்கப்பட்டார்... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வவுனியா குருமன்காடு பகுதியில் பெண் சடலமாக மீட்க்கப்பட்டார்...

 


வவுனியா குருமன்காடு கோவில் வீதி பகுதியில்  29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற இளம் பெண் ஒருவரை காணவில்லை என அவரின் வீட்டார் தேடிய நிலையில் குறித்த பெண் வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த  பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், இம் மரணம் கொலையா!, தற்கொலையா! அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

About ஈழ தீபம்