வீட்டில் வேலை செய்த 18 வயது இளம் பெண்ணை அடித்து துன்புறுத்தி சூடு
வைத்து கொடுமைப்படுத்திய பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
செய்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சென்னை
பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
வீட்டில் அதிகமாக வேலை இருந்ததால் வேலைக்கு சேர்ந்த இரண்டு நாட்களில் தான் தனது வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார் அந்த இளம்பெண்
எம்எல்ஏவின்
மகன் மற்றும் மருமகள்
இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், தனது மனைவியுடன் சேர்ந்து அந்த இளம்பெண்ணை
கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் கைகள், கழுத்து, முதுகு மற்றும் முகத்திலும் சிகரெட்டால் சுட்டு அவரை சித்ரவதை செய்துள்ளனர்.
வலி தாங்க முடியாமல் கதறி அழுத போதும் அந்த இளம் பெண்ணை வெளியே விடாமல் கொடுமைப் படுத்தியுள்ளனர்.