தலைமை
நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தனது கூட்டாளியான ஆலிவர் முல்ஹெரினை ஹவாயில் திருமணம் செய்து
கொண்டார்.
சாம்
ஆல்ட்மேன் தனது திருமண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்த பிறகு NBC செய்திக்கு குறுஞ்செய்தியில் தனது திருமணத்தை உறுதிப்படுத்தினார்.
தம்பதியினரின்
குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஆல்ட்மேன் மற்றும் முல்ஹெரின் ஆகியோர் திருமண உறுதிமொழிகளை பரிமாறிக் கொள்வதை படங்களில் காணலாம்.
ஆலிவர் முல்ஹரின் ஒரு ஆஸ்திரேலிய மென்பொருள் பொறியாளர்.
சாம் ஆல்ட்மேன், கடந்த செப்டம்பரில் நியூயார்க் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், தானும் முல்ஹெரினும் விரைவில் குழந்தைகளைப் பெற விரும்புவதாகக் கூறியிருந்தார்.