விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது . - Eelatheepam Sri Lankan Breaking NEWS

விபத்தில் உயிரிழந்த சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது .


இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

 சிலாபம் - ஆராச்சிகட்டுவ ராஜக தலுவ தேவாலயத்தில்,பிற்பகல் 2 மணியளவில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 


இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல், மக்கள் அஞ்சலிக்காக பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்ச்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பூதவுடல், சிலாபம் ஆராச்சிகட்டுவவில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு நாளை காலை 10 மணியளவில் எடுத்துச்செல்லப்படவுள்ளது. 

 

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் , சனத் நிஷாந்தவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு சென்று தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தனர். 

 

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதிவேக வீதியின் 11 ஆவது மைல் கல் பகுதியில், முன்னால் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதியது.மேலும்  ஜீப் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் கூறியுள்ளார்  .

சனத் நிஷாந்த அவர்கள் பயணித்த ஜீப்பின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார்  சந்தேகித்துள்ளார் . அதிகாலை 02 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

  இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மோதிய கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தெரணியகல பகுதியை சேர்ந்த 39 வயதான சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை வத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, சிலாபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கொழும்பு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

About UPDATE