நேற்று (15.01.2024) முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்து சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது பிரதான வீதிக்கு செல்ல
முற்பட்ட மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதி விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில்
மேலும் விசாரிக்கையில், விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார்.
மேலும், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்