பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைசேர்த்தவரை பார்க்காத ஜனாதிபதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைசேர்த்தவரை பார்க்காத ஜனாதிபதி

இருவரும் பெண்கள், பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமைசேர்த்தவரை பார்க்காத ஜனாதிபதி" என பல பதிவுகள் பேஸ்புக்கில் வலம் வருகிறது


.கில்மிசா என்ற பெயர் நினைவில் இருக்கிறதா அல்லது அகிலதிருநாயகி என்ற பெயர் நினைவில் இருக்கிறதா, என ஒவ்வெருவரும் தங்களை தாங்களே கேட்டுக்கொண்டால் இதனை இலகுவாக புரிந்துகொள்ள முடியும் ஜனாதிபதியின் வருகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும் பொழுது அப் பிரதேச பிரதிநிதிகள், அவரின் கட்சிசார் பொறுப்பாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் என தனித்தனியாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்வார்கள்.

 

அதில் ஏற்புடைய அனைத்தும் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்கப்படும்.அகிலாம்மாவை அழைத்துச்செல்வதால் எந்த நன்மையும் இல்லை என்று நினைத்த பிரதிநிதிகள் அதற்கான ஏற்பாட்டை செய்யவில்லை.. கில்மிசாவை அழைத்துச்செல்வதால் தாங்கள் பலனடையலாம் என்ற எண்ணமே கில்மிசா அங்கு வருவதற்கு காரணமாக அமைந்தது. இதுவே எதார்த்தம்.அகிலதிருநாயகி அம்மாவை அப் பகுதி மக்கள் கொண்டாடியிருந்தால் அந்த அம்மாவையும் யாரேனும் ஒருவர் ஜனாதிபதியிடம் கூட்டிக்கொண்டு சென்றிருப்பார்கள்..

About ஈழ தீபம்