இளம் பெண் ஒருவர் படுகொலை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இளம் பெண் ஒருவர் படுகொலை

பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் கத்தியால் குத்தி இளம் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்

.அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது 24 வயது காதலன் வாக்குவாதம் காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.குறித்த காதலன் களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான இளைஞனுக்கும் குறித்த யுவதிக்கும் இடையில் சுமார் 03 வருடங்களுக்கு முன்னர் இருந்து காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது.

சந்தேகநபரான காதலன் இன்று காலை பெண்ணின் வீட்டிற்கு வந்ததாகவும், இதன்போது இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


இதன்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலையின் பின்னர் சந்தேக நபரான காதலன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும் பிரதேசவாசிகள் குழுவொன்று அவரைப் பிடித்து பிலியந்தலை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பதில் நீதவான் ஸ்தல விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

About ஈழ தீபம்