மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்ட்ட கிலென்டில் தோட்ட தேயிலைமலையில் சிறுத்தையொன்று வலையில் சிக்குண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக
நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (17) காலை குறித்த தேயிலைமலைக்கு தொழிலுக்கு சென்ற தொழிலாளர்கள் புலியொன்று சிக்குண்டு இருப்பதை கண்டு தோட்ட
முகாமையாளருக்கு அறிவித்ததையடுத்து முகாமையாளர் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து ரந்தெனிகல மிருக வைத்தியசாலை வைத்திய குழுவினர்கள் வரவழைக்கப்பட்டு மயக்க ஊசியேற்றி குறித்த சிறுத்தையை மீட்டு
ரந்தெனிகல வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.