வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

 கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (11) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 

கொலை இடம்பெற்ற இடத்திலேயே சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

About ஈழ தீபம்