பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ட்விஸ் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ட்விஸ்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது ட்விஸ்டாக Mid-Week Eviction செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன


அந்த வகையில், தற்போது வரையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் இன்றைய எபிசோடில் வெளியேற்றப்படுவார் என தகவல் கூறப்படுகிறது.

  அதில், குறைந்த வாக்குகளை விஜய் வர்மா (Vijay Varma Eviction) பெற்றிருப்பதாகவும், அவர்தான் இன்று வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இருப்பினும் இது முழுக்க முழுக்க சர்ப்ரைஸ் எனவும் இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

அர்ச்சனா போன்றில்லாமல் விஜய் வர்மா தொடக்கத்தில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்.

  அவர் 21ஆவது நாளிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அதன் பின் வைல்ட் கார்டில் அவர் என்ட்ரி கொடுத்தார்.

  வைல்ட் கார்ட் மூலம் 56ஆவது நாள் அன்று பிக்பாஸ் வீட்டுக்கு வந்த இவர் 100ஆவது நாளான இன்று வெளியேறுகிறார் என கூறப்படுகிறது

இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவே தகவல்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றன.

 

விஜய் வர்மா சம்பளம்

 

அப்படி விஜய் வர்மா (Vijay Varma Salary In Bigg Boss 7) இன்று எவிக்ட் செய்யப்பட்டால் அவர் பிக்பாஸ் மூலம் எவ்வளவு சம்பாதித்தார் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன

அதாவது முதல் 21 நாள்கள் விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்தார். அதில் ஒருநாளைக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 21 நாளைக்கு ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் அவருக்கு சம்பளம் கிடைத்ததாக கூறப்படுகிறது

அந்த வகையில், தற்போது இந்த 44 நாள்களையும் சேர்த்து மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை பிக்பாஸ் மூலம் விஜய் வர்மா சம்பாதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் சீசன் 7 தொடரின் வெற்றியாளராக இருப்பார் என பலராலும் கணிக்கப்பட்ட நடிகை விசித்ரா கடந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டார்.

  விசித்ரா எவிக்ட் ஆனது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது. .

About UPDATE