ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஓய்வூதியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

 

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 


இன்று (10) பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இது ஓய்வூதியர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டார்.

 

"ஓய்வூதிய உதவித்தொகை வழங்குவதில் நாங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொண்டோம், இது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது.

  நெருக்கடியைத் தணிக்க நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையே இடம்பெற்ற நீண்ட காலந்துரையாடல்களால், முறையாக பணிகளைத் தொடங்க முடிந்தது. 

அதன்படி, 2023 டிசம்பர் மாதத்திற்கான பணத்தை நிதி அமைச்சசு  ஒதுக்கியது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்" என்றார்.

About UPDATE