செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்:
- நண்டு- 1 கிலோ
- எண்ணெய்- தேவையான அளவு
- சோம்பு- 3 ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 10
- மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்
- தக்காளி- 4
- சின்ன வெங்காயம்- 25
- மிளகாய் தூள்- 5 ஸ்பூன்
- கரம் மசாலா- 2 ஸ்பூன்
- தேங்காய் துருவல்- 1 கைப்பிடி
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- கடலை பருப்பு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
செட்டிநாடு நண்டு குழம்பு செய்முறை:
ஸ்டேப் -1
முதலில், அடுப்பில் கடாயை வைத்து அதில் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
எண்ணெய் லேசாக சூடானதும், அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து லேசாக வதக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
பிறகு, அதே கடாயில் கடலை பருப்பு சேர்த்து அதனையும் லேசாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது, ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் வறுத்த கடலை பருப்பை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அடுத்து, மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்த வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.