மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்த ஜோடி கைது!

 

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே,

  அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள்

தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 


கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி (17) ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்டதாக

நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார்.

 

கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது 46) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.  வத்தளையைச் சேர்ந்த சுபாஷ்

செல்வராணி (வயது 39) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சில நாட்களுக்கு முன்  மிதியகல தெமோதர பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பண்டாரவளை நகருக்கு கடந்த 31 ஆம் திகதி வந்துள்ளார்.

 

இந்த ஜோடி அவரிடம்  வந்துஅம்மா எங்கே போகிறீர்கள்?”

  எனக் கேட்டுள்ளனர். என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? எனக் கேட்டு உடனடியாக பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

 

சந்தேகநபர்கள் இருவரும், குறித்த பெண் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதை அடையாளம் கண்டுகொண்டதுடன், பொருளாதார

நிலையில் இருந்து மீள உதவுகிறோம் என தெரிவித்து உள்ளனர்.

 

அப்பெண்ணுக்கு தைக்கப்பட்ட சில ஆடைகளை கொடுத்துள்ளனர். அதனை விற்பனை செய்துவிட்டு, தங்களுக்கு தொலைபேசி அழைப்பை

ஏற்படுத்துமாறு அலைபேசி இலக்கமொன்றையும் கொடுத்துள்ளனர் தைக்கப்பட்ட ஆடைகளை சிலவற்றை விற்பனை செய்துவிட்டு,

  சில  ஆடைகள் மீதம் இருப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த பெண் தெரிவித்துள்ளார்.  மறுமுனையில் பதிலளித்த  தம்பதியினர்,

  மீதமிருக்கும் ஆடைகளை எடுத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு வருமாறு கூறியுள்ளனர்.

 

குறித்த பெண் தனது மகனுடன் நுவரெலியாவிற்கு வந்ததையடுத்து அவர்களை சந்தித்து  அவர்களுக்கு பயண சோர்வை களைப்பதற்காக,

  ரோல்ஸ் மற்றும் இனிப்பு பானத்தை கொடுத்துள்ளனர்.

 

அவ்விருவரும் அவற்றை வாங்கி பருகியுள்ளனர். அதன்பின்னர்  பெண்ணும் அவரது மகனும் சுயநினைவை இழந்தனர்,

  அவர்கள் சுயநினைவு திரும்பிய போது, ​​அவர்கள் நுவரெலியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

அதன் பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணிடம் தங்க வளையல்

ஒரு ஜோடி காதணி, சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 5,000 ரூபாய் மதிப்புள்ள தொலைபேசி மற்றும் 5,000 ரூபாய் பணம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

அவரது மகன் வைத்திருந்த விலையுயர்ந்த அலைபேசி என்பனவும் காணாமல் போயுள்ளன. சந்தேகநபர்களின் அடையாளம் தெரியவில்லை என தாயும்

மகனும் கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நுவரெலியா பொலிஸார், சுற்றிலும் உள்ள பல கடைகளின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து,

  மிகவும் நுட்பமான முறையில் சந்தேக நபர்களை கைது செய்தனர். இதன்படி, சந்தேகநபர் பன்னில பிரதேசத்தில் இருந்தும், பெண் வட்டவளை பிரதேசத்தில்

இருந்தும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்

 

About UPDATE