மூக்குத்திகள்
மூக்குத்திகள் அணிவது பெண்களின் வழக்கம்.
முன்னைய காலங்களில் திருமணமான சுமங்கலிப் பெண்கள் அணிந்து கொள்ளும் முக்கிய ஆபரணங்களுல் முக்கியமான ஒன்று மூக்குத்தி.
தற்போது இளம் பெண்களும் மூக்குத்தி அணிவதை ஃபேஷனாக கொண்டுள்ளனர். அதைவிட ஆண்களும் மூக்குத்திகள் அணிந்திருப்பதை அங்கங்கே நாம் காணக்கூடியதாக உள்ளது.
மூக்குத்திகள் மூக்கை அலங்கரிப்பதற்காக மட்டுமன்றி ஆயுளையும் விருத்தியாக்குகின்றது.
மூச்சு விடுவதைச் சீராக்குவதோடு, காக்காய் வலிப்பு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
மேலும் இரத்த அழுத்தத்தை ஏற்படாமல் தடுத்தல் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது என்று கூறப்படுகின்றது.
மாங்கல்யம்
சுமங்கலிப் பெண்ணுக்கு அடையாளம் மாங்கல்யம். மாங்கல்யம் ஏறுவது இறைவன் அமைத்த வரம் என்று கூறுவர்.
திருமணத்தின் போது மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டிய பின்பே திருமண பந்ததத்தில் இருவரும் இணைந்து கொண்டனர் என்பதற்கு சாட்சியாகிறது.
இது காலம் காலமாக பின்பற்றபட்டு வரும் தமிழர் பண்பாடாகும். மாங்கல்யமானது மங்கலகரமானது என்பதால் தீய எண்ணங்களை அது அண்டவிடாது என்று கூறப்படுகிறது.
ஒரு பெண்ணின் கழுத்தில் தொங்கும் தாலியானது இதயத்திற்கு மேல இருப்பதால் அவை உடலின் இரத்த ஓட்டத்தை நெறிப்படுத்த உதவுகிறது
. மாங்கல்யம் பெண்களின் இதயத்தை எந்நேரமும் உரசிக் கொண்டு இருப்பதால் இதயத்துடிப்பை சீராக்குகிறது.