குரங்குகளுக்கு கருத்தடை! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

குரங்குகளுக்கு கருத்தடை!

 மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம்

 ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.


மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,

 விவசாய அமைச்சு இதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மாத்தளை மாவட்டத்தில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் இப்பிரதேசத்தில் எழுந்துள்ள விவசாயப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, 

இலங்கையில் முதன் முறையாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடைத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக

 மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாத்தளை மாவட்டம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் காணப்பட்டன" என்றார்.

About UPDATE