ஜப்பானில் மறுபடியும் நிலநடுக்கம்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜப்பானில் மறுபடியும் நிலநடுக்கம்!

 

பசிபிக் பெருங் கடலின் நெருப்பு வளையம் எனப்படும் ரிங்க் ஆப் ஃபயரில் ஜப்பான் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

 அந்த வகையில் புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

 


ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால், சுமார் 200 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் வீரியம் காரணமாக 

சுனாமி அலைகளும் எழுந்தன. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டன.

 

இந்த பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்கள் மீளாத நிலையில், தற்போது மீண்டும் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய ஜப்பானை

 மையமாக கொண்டு, ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளியாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

 

நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில்

உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அதே சமயம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

 

 

About ஈழ தீபம்