இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கும் தர்பூசணிக்கு என்ன தொடர்பு? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கும் தர்பூசணிக்கு என்ன தொடர்பு?


கடந்த மூன்று  மாதங்களாக பதாகைகளிலும் போராட்டக்காரர்கள் அணிந்திருக்கும் டி-சர்ட்களிலும் பலூன்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தர்பூசணி Emoji இடம்பெற்று வருகிறது. வெட்டப்பட்ட தர்பூசணியின் முக்கோண வடிவிலான Emoji இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் குறிப்பதற்கு ஆதரவாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படுகின்ற வார்த்தைகள் காண்பிக்கப்படுகின்றது  .


 நிரலை (algorith) முறியடிக்க தர்பூசணி Emoji -ஐ ஆதரவாளர்கள் பயன்படுத்துகிறார்கள். பாலஸ்தீன கொடியில் உள்ள நிறங்கள் இந்த தர்பூசணியிலும் உள்ளது. சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு ஆகியவை முறையே தர்பூசணியின் மையப்பகுதி, வெளிப்புறம், விதைகள் காணப்படுகின்றது .  தர்பூசணியைக் குறியீடாக பயன்படுத்துவதற்கு ஒரு வரலாறும் உண்டு. 

 1967 போரின்போது பாலஸ்தீன கொடி காட்சிப்படுத்தப்படுவதை இஸ்ரேல் ஒடுக்கியது. 1980-ல் மூன்று ஓவியர்கள் அரசியல் ஓவியத்தைக் காட்சிப்படுத்தினர். அதில் பாலஸ்தீன கொடியின் நிறங்கள் இருந்ததால் காட்சி முடக்கப்பட்டது. 


  தர்பூசணி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் கூட நடந்ததாக தெரிகிறது.

About UPDATE