ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆபரணங்கள் அணிவதன் அறிவியல் ரகசியம்

 

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் ஆடைகளை பார்த்து பார்த்து வாங்குவதை போலவே தாம் அணியும் ஆபரணங்களையும் பார்த்து பார்த்து வாங்குவார்கள்.

  அதிலும் பெண்களுக்கு தான் காதுக்கு,கழுத்துக்கு கையிற்கு,காலுக்கு,நெற்றிக்கு,இடுப்பிற்கு என எல்லா பாகங்களுக்கும் ஆபரணமணிவது என்பது தொன்று தொட்டு வருகின்ற பழக்கமாயிற்று.

  தற்கால ஆண்களும் கூட ஸ்டைலுக்காக ஆபரணங்களை தேடித் தேடி வாங்கி அணிகின்றனர்.

  இப்படிப்பட்ட ஆபரணங்கள் அணிவது அழகுக்காக என்றாலும் அதில் பல ஆரோக்கியமான நலன்களுகம் அடங்கியிருக்கிறது

ஆபரணங்கள் அணிவதால் கிடைக்கப்பெறும் நன்மைகள் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்!

நெற்றிச்சுட்டி

 

பொதுவாக தலைமுடி ஆரம்பிக்கும் நெற்றிப் பகுதியில் அணியப்படுவது நெற்றிச் சுட்டியாகும்.


  உச்சு வகுந்தெடுத்து அதன் நேர்கோட்டு வழியில் ஒற்றை நெற்றிச் சுட்டி நெற்றிக்கு பட்டு ஆடும் வகையில் நெற்றிச் சுட்டி இடுவது வழக்கம்.

  திருமண பெண்கள் இரு பக்கத்திலும் காது வரை நீண்ட நெற்றிச் சுட்டி அணிந்து கொள்வது வழக்கம்.


  முன் நெற்றியை அலங்கரிக்கும் இது போன்ற நெற்றிச் சுட்டிகள் உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது. குறிப்பாக தலைச் சூட்டை தணிக்க இது உதவுகிறது என்று நம்பப்படுகிறது.

காதணிகள்

 

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு அணிகலன் கம்மல்கள் தான். பிறந்த பெண்குழுந்தைக்கு இரு காதுகளையும் குத்துவது வழக்கம்


. அதே போல் பிறந்த ஆண் குழந்தைகளுக்கு ஒற்றை காது குத்துவதும் வழக்கம். தற்கால ஆண்கள் இரண்டு காதுகளையும் குத்திக்கொண்டு தம்மை ஸ்டைலாகவும், மாஸாகாவும் காட்டிக்கொள்கின்றனர்.

அதிலும் குறிப்பாக ஒரு காதில் தொங்கட்டான்கள் அணிவது தற்கால இளம் ஆண்களுக்கு ஃபேஷனாக உள்ளது.

பெண்கள் தாம் அணியும் ஆடைக்கு ஏற்றவாறு டிசைன் டிசைனாக காதணிகளை அணிந்து கொள்வார்கள்


ஜிமிக்கிகள், வளையங்கள், பாலிகள், தொங்கட்டான்கள், பொத்தான்கள் என விதம் விதமாக காதணிகள் சந்தையிலுள்ளது.

  இத்தகைய காதணிகள் நம் காதுகளுக்கு கவர்ச்சியூட்டுவதாக இருந்தாலும் அதில் ஒரு ஆரோக்கிய காரணம் உள்ளது.

  காதணிகள் காது மடலிலிருந்து செல்லும் நரம்பானது நம் உடலின் சிறுநீரகம்,மூளை மற்றும்

கர்ப்பப்பை வாய் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கின்றன.

இளம் வயதில் காது குத்தப்படுவதால் மூளை வளர்ச்சியானது மேம்படும் என்றும் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

  பெண்களின் மாதவிலக்கானது எவ்வித தடைகளுமின்றி சீர்பட நடைபெறும் என்றும் கூறப்படுகிறது

பழங்காலத்திலிருந்தே காதணிகள் அணிவது மரபாகியுள்ளது. இதனை சான்றுபடுத்தும் விதமாக காதணிகள் அணிவது உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவுகின்றதென வேத சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About UPDATE