வளையல்கள்
கைநிறைய வளையல்கள் அணிவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. வெள்ளி,சில்வர், இரும்பு போன்று ஒற்றை வளையல்கள் அணிவது ஆண்களுக்கு பிடித்தமான ஒன்று.
கையின் மணிக்கட்டில் உடலின் துடிப்பு விதத்தை கூட்டும் நரம்பு ஒன்று உள்ளது. கைகளில் வளையில்கள் அணிந்து கொள்வதன் மூலம் இந் நரம்பினூடாக இரத்த ஓட்டம் சீர்பட உதவுகிறது.
வளையலின் ஓசை உடலிற்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை தரும். வளையல் அணிவது உடல் ஆரோக்கியம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் அடையாளமாகவே கருதப்பட்டது.
வளையல் ஓசை உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளித்து மன அழுத்தத்தை குறைப்பதாகவும்
குறிப்பிடுகின்றன.
மோதிரங்கள்
ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவான ஆபரணங்களில் மோதிரங்களும் ஒன்று. திருமணத்திலும் மோதிரம் என்பது ஒரு அடையாளமாகவே கருதப்படுகிறது.
திருமணத்தில் மோதிரம் மாற்றி அணிந்து கொள்வது திருமணத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வாக அமைகிறது
. அதிலும் தமிழ் முறைப்படி நடைபெறும் திருமணச் சடங்குகளில் குடத்தில் மோதிரமிட்டு மணமகனும்,மணமகளும் அதனை தேடி பெறுதல் போன்ற நிகழ்வுகளில் மோதிரங்கள் இன்றியமையாததாகும்.
நம் உடலிலுள்ள நரம்புகள் ஒன்றோடொன்று இணைந்தவையாகும். நம் கைவிரல்களில் மோதிர விரலென்றே ஒரு விரல் இருக்கிறது.
நம் மோதிர விரலில் இருக்கும் நரம்பானது மூளை வழியாக இதயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆகவே அந்த விரலில் மோதிரம் அணிவது இதயத்திற்கு ஆரோக்கியத்தை தருகிறது. உடல் முழுவதற்கும் நன்மையளிக்கிறது.