பிக்
பாஸ் நிகழ்ச்சி பலருக்கும் அடையாளத்தை தேடி கொடுக்கும். சிலர் அடையாளத்துடனே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்பார்கள்.
அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் அடையாளத்தை பெற்றவர் மாயா. விக்ரம், லியோ போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்ற மாயா அதன்பின் மோசமான வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இருந்து பெற
துவங்கிவிட்டார். ஆனாலும் கூட தற்போது பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டாப் 5 இல் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில்,
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மாயா ஹீரோயின் ஆகப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மாவீரன்,
வெந்து தணிந்தது காடு, ஜவான் ஆகிய படங்களில் ஆக்ஷன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த Yannick Ben என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளதாம்.
இப்படத்தில்
மாயா ஹீரோயினாக அறிமுகமாக போகிறார் என லேட்டஸ்ட் தகவல்
வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.