மட்டக்களப்பு
மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதிக
மழையுடனான வானிலையால் ரயில் மார்க்கம் நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் காரணமாக இன்று(11) காலை 6.05 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த உதயதேவி ரயிலும்
இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார்.
நேற்றிரவு(10)
மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த இரவு நேர தபால் ரயிலும் இரத்து செய்யப்பட்டது.