ஒட்டியாணம்
இடுப்பிற்கு எடுப்பாக இருப்பது ஒட்டியணாங்கள் தான்.
கொலுசுகள்
கொலுசுகள் பெண்கள் விரும்பி அணிவது அதன் சத்தத்திற்கு தான்.
தற்கால பெண்கள் ஒற்றைப் பட்டி போன்ற கொலுசுகளையும் அணிவார்கள். சிலசமயம் அதனை ஒரு காலில் மட்டும் அணிந்து கொள்கிறார்கள்.
பெரும்பாலும் வெள்ளியில் கொலுசுகள் அணிவது தான் முறை வழக்கமும் கூட. ஆனால் சிலர் தங்கத்தில் அணிகின்றனர்.
தங்கத்தில் கால் கொலுசு அணிவது அதன் பெறுமதியை அவமதிப்பது போன்றதாகும்.
இதனால் பயன் எதுவும் இல்லை. வெள்ளிக் கொலுசுகள் கணுக்கால்களில் அணியப்படும் போது நடக்கையில் ஒலியை உண்டாக்குகிறது.
இவை நேர்மறையான எதிர்வலைகளை உருவாக்குகின்றன.
வெள்ளியானது நல்லதொரு ஆற்றலை உடலுக்குள் கடத்துகின்றது.
பெண்களுக்கு உணர்ச்சிகள் பெருவிரலில் இருந்து தொடங்கி குதிக்கால் நரம்பு வழியாக தலைக்கு ஏறுகிறது.
எனவே பெண்கள் காலில் கொலுசு அணியும் போது, கொலுசானது குதிகால் நரம்பில் உரசிக் கொண்டே இருக்கும்.
இதனால் மூளைக்குச் செல்லும் உணர்ச்சி அலைகள் கட்டுப்படுத்தப்படுகின்றது